உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

149

47. சடையன் ஊர்

நீர்வளம் என்பவை

ஒரு நாட்டுக்கு நிலவளம், இன்றியமையாதவை. இவ்விரண்டும் இருப்பின் விளைவு சிறக்கும். மக்கள் வாழ்வில் வறுமை இல்லாமையால் களவு வஞ்சம் என்பவை இருத்தல் அரிது.

கம்பர் என்னும் பாவலரைக் காத்த வள்ளல் சடையப்பர். அவர் ஊர் வளத்தைச் சொல்லும் வகையில் அந்நாட்டவர் அமைதி வாழ்வையும் கூறுகிறார்.

பருத்த எருமை குளத்துள் புகுந்து நீருள் படுக் கிறது. அந் நீரில் இருந்த வரால் மீன் எருமையின் மடுவை முட்டுகிறது. அம் முட்டுதலைத் தன் கன்றின் முட்டுதலாக எண்ணிய எருமை வீடுவரை பாலைக் கொட்டுகிறது. இத்தகு வளம் உள்ளமையால் வீட்டுக் கதவுகளை அடைத்துக் காப்பவர் இல்லை. களவு போய் விடும் என்னும் அச்சமும் இல்லை. இத்தகைய ஊர் திருவெண்ணெய் நல்லூர்.

மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றென்று வீட்டளவும் பால்சொரியும் வெண்ணெயே - நாட்டில் அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும் உடையான் சடையன்தன் ஊர்.

மோடு – பெரிய. வாவி - குளம். வெண்ணெய் - திருவெண்ணெய் நல்லூர். அஞ்சல் - அஞ்சாதே. சடையன் சடையப்ப வள்ளல்.