உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

48. வெளியேறு

கம்பருக்கும் சோழவேந்தனுக்கும் கருத்து மாறுபாடு ஏற்பட்டிருக்கிறது. கோவேந்தனாகிய சோழன் என் நாட்டை விட்டு வெளியேறும் என்று கம்பரைக் கூறினானாம். கம்பர் பாவேந்தன் அல்லவா! அதனால் சினம் கொண்டான்; சீறினான்; அச்சீற்றம் பாட்டு ஆகியது.

மன்னன் என்றால் உலகில் நீ ஒருவன் தானா? வள மிக்க நாடு என்றால் உன் நாடு மட்டும்தானா உலகில் உண்டு? நீ என்னைக் காப்பாய் என்று எண்ணியோ தமிழை நான்கற்றேன்? என்னை வருக என்று வரவேற்காத அரசொன்றும் உண்டோ? குரங்கை ஏற்றுக் கொள்ளாத மரக்கொம்பு ஒன்றுதானும் உண்டோ? வருகிறேன் என்று சொல்லிவிட்டுப்போனார் என்பது அப்பாடல்.

மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ

உன்னை அறிந் தோதமிழை ஓதினேன் - என்னை விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு.

வள நாடு - வளமிக்க நாடு, சோழநாடு. ஓதினேன் கற்றேன். கொம்பு - கிளை. வேந்து – அரசன், அரசு.