உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

151

49. இல்லையோ இடம்

நாட்டை விட்டுப் போகச் சொல்லிய வேந்தன் சோழனை நோக்கி மேலும் கம்பர் ஒரு பாட்டுப் பாடினார்.

அந்நாளில் சோழநாடு 24 காதம் பரப்புடையதாக இருந்திருக்கிறது. இந்த உலகத்தில் இந்த இருபத்து நான்கு காதம் தான் உண்டா? அதற்கு மேல் இடம் ஏதும் இல்லையா? இருக்கும் இடத்தையும் கடலே அள்ளிக் கொண்டு போய் விட்டதா? நீ சினம் கொண்டால் என்னைப் போன்றவர்களுக்கு இடமே கிடை மே கிடையாதா? என்றார்.

என்ன?

காவிரியன்னையின் அருள் பொன்கொழித்தால் தான் கொல்லிமலை தேன் பொழிந்தால் தான் என்ன? ஆள்பவனுக்கு வளமான உள்ளமும் இனிய செயலும் இருந்தால் அல்லவோ பயன் என எண்ணி னார்.

காதம் இருபத்து நான்கொழியக் காசினியை

ஓதக் கடல்கொண் டொழித்ததோ - மேதினியில் கொல்லிமலைத் தேன்சொரியும் கொற்றவா நீமுனிந்தால் இல்லையோ எங்கட் கிடம்?

காதம் - (24) 10 கல்பரப்பு. காசினி - உலகம். ஓதக்கடல் - அலைவீசும் கடல். கொற்றவன்

- அரசன். எங்கட்கு - கம்பர் தம்மை மட்டுமன்றித் தம் மொத்த புலவர்களையும் குறித்தது.