உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

இளங்குமரனார் தமிழ் வளம் - 20

50. அம்பு

கருத்து வேற்றுமை

கம்பருக்கும் சோழனுக்கும் முற்றியிருக்கும் போலும். அதற்குக் காரணமாகக் கம்பர் மகன் இருந்திருப்பான்போலும். அவனைச் சோழன் தன் வில்லால் தாக்கியிருப்பான் போலும். இதனால் கம்பர் சோழனை நோக்கிக் கூறியதாக ஒரு பாட்டைக் கூறுதல் அறியப்படுகின்றது.

வில்லில் இருந்து வெளிப்பட்டுத் தாக்கும் அம்பு காடியதா? வாயில் இருந்து வெளிப்பட்டுத்தாக்கும் சொல்லம்பு கொடியதா? வில்லம்பினும் சொல்லம்பே கொடுமையானதாகும். வேந்தனே உன் வில்லம்பு என் நெஞ்சை வாடச் செய்தது. ஆனால் என் சொல்லம்போ உன்னளவில் நில்லாமல் உன் குடியையே சுட்டெரித்தது என்று ஒரு பாடல் பாடினார் என்பது அது.

66

'வில்லம்பு சொல்லம்பு மேதினியில் ரெண்டுண்டு

வில்லம்பில் சொல்லம்பே மேலதிகம் - வில்லம்பு பட்டதடா என்மார்பில் பார்வேந்தே நின்குலத்தைச் சுட்டதடா என்வாயில் சொல்.”

மேதினி – உலகம். ரெண்டு - இரண்டு. பார் - உலகம். பட்டது அடா; சுட்டது அடா; அடா அடே என்பவை தம்மில் தாழ்த்தியுரைக்கும் சொல். சீற்றத்தில் சொல்லிய சொல்லுமாம்.