உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

153

51. நன்றி

கம்பருக்கும் காலமெல்லாம் உதவிய வள்ளல் சடையப்பர். தம் உதவியால் இராமாயணத்தில் பாடு புகழ் பெற்றவர் அவர். கம்பர் வயதால் முதிர்ந்து மூத்து மூச்சொடுங்கும் நிலையிலும் சடையப்பர் கொடையை மறந்தார் அல்லர். நன்றியை மறப்பதை நன்றி கொல்லுதல் என்று கூறிய வள்ளுவரை வழிமொழிந்து பாடியவர் கம்பர்.

L

சடையப்பர் கம்பரைக் கவலையுடன் பார்த்தார். கால அளவைக்கு உட்பட்ட உடலையும் அதன் தளர்வையும் உணர்ந்து வருந்தினார். அந்நிலையில் கம்பர், பசுப்பால் என்ன, தேன் என்ன, வாழை, மா, பலாக் கனிவகை என்ன, இன்னவை யெல்லாம் இனிதாக உண்டு திளைத்த என்னால், யான் இறக்கும் போதேயும் கூட சடையப்ப வள்ளலே உமை மறக்க முடியுமா? என்று பாடினார்.

66

'ஆன்பாலும் தேனும் அரம்பைமுதல் முக்கனியும் தேம்பாய உண்டு தெவிட்டுமனம் – தீம்பாய் மறக்குமோ வெண்ணெய் வருசடையா! கம்பன் இறக்கும்போ தேனும் இனி”

என்பது அது.

ஆன்

பசு. அரம்பை – வாழை. தேம்பாய - இனிமை பெருக. தெவிட்டுதல் சுவை மிகுதல். தீம்பாய் – தீமையாய். வெண்ணெய் - திருவெண்ணெய் நல்லூர். சடையப்பர் ஊர்.