உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

இளங்குமரனார் தமிழ் வளம் - 20

52. முடி நடல்

கம்பர்தம்மாணவராகவும் செல்வராகவும்கொடையாளராகவும் விளங்கியவர் ஏகம்பவாணர் என்பார். அவரைப் போலவே அவர் மனைவியாரும், வேலையாளும் பாவன்மை பெற்றுவிளங்கினர்.

ஒருமுறை அரசு அலுவலர் ஒருவர் ஏகம்பவாணரைத் தேடிவந்தார். வாணர் வீட்டில் இல்லை. தம்முடைய அலுவல் செருக்கால் வாணர் முடிநடப் போயினரா என இகழ்வதுபோல் வினாவினார். அவர்தம் எள்ளல் குறிப்பை உணர்ந்த ஏகம்பவாணர் துணைவியார் ஒரு பாட்டுப் பாடினார்.

படை களை யெல்லாம் மிதிக்கும் தழைகள் ஆக்கி, போர்க் களத்தில் கொட்டும் குருதியை நீராகத்தேக்கி, யானையை விட்டுத் தொழியாக மிதித்த நல்ல சேற்றில் மானமிக்கவரும், பாவலர்க்குப் பாவலரும் ஆகிய வாணர் மூவேந்தரும் அணிந்த முடிகளைப் பறித்து நட்டார் என்றார். உழவரால் தாம் உலகம் வாழ்கிறது; அரசும் ஆள்கிறது என்பதைக் காட்டியது அது.

சேனை தழையாக்கி, செங்குருதி நீர்தேக்கி, ஆனை மிதித்த அருஞ்சேற்றில் - மானபரன் பாவேந்தர் வேந்தன் பறித்து நட்டான் ஏகம்பன் மூவேந்தர் தங்கள் முடி.

என்பது பாடல்.

சேனை படை. குருதி – இரத்தம். மானபரன் - பெருமை மிக்கவன். முடி - நாற்றுமுடி. வேந்தர் மகுடம், தலை.