உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

155

53. புலவன்

கம்பர் மகன் அம்பிகாபதி; அம்பிகாபதியின் மகன் பொய்யாமொழி; பொய்யாமொழிப்புலவர் தஞ்சைவாணன் கோவை பாடியவர். அவரை மதித்த அரசர் 'புலவர் என்றால் பொய்யா மொழியாரே புலவர்' என்று பாராட்டினார். ஆனால் பண்பா டமைந்த புலவராகிய பொய்யாமொழியார் இப்புகழ்ச் சொல் கேட்டு தலை நாணினார்.

அறநூலாகிய திருக்குறளை இயற்றியவனும் புலவன்; அத்திருக்குறளுக்கு உரைகண்ட புலவனும் புலவன்; குறுமுனிவன் என்று சொல்லப்படுவானும் புலவன். இவர்களோடு என்னையும் புலவர் என்றால் அறிவுடைய பெருமக்கள் ஏற்றுக் கொள்வரோ என்று பாடினார்.

று

66

அறமுரைத் தானும் புலவன்முப் பாலின் திறமுரைத் தானும் புலவன் - குறுமுனி தானும் புலவன்; தரணி பொறுக்குமோ யானும் புலவன் எனின்”

என்பது அப்பாடல்

அறம், முப்பால் - திருக்குறள். குறுமுனி - அகத்தியன்; தரணி – உலகம். புலவர்கள்;

-

எனின் - என்று சொன்னால்.