உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

157

55. ஓசை உண்டு

இரட்டைப் புலவர்கள் ஆங்கூர் என்னும் ஊர்க்குச் சென்றனர். அங்கே இருந்த கோயிலில் தங்கினர்; பசி மிகுதியாக அவர்களுக்கு இருந்தது; அந்த நேரம் பூசை செய்வதற்குப் பூசாரி வந்தார். சரி! பூசை முடிந்தால் பொங்கல் வடை முதலிய உணவு கிடைக்கும் என்று புலவர்கள் எண்ணியிருந்தனர்; சங்கு முழங் கியது; முரசு அறையப் பெற்றது; கொட்டு அடிக்கப் பெற்றது! பூசை முடிந்தது! இறைவனுக்கே பொங்க லிட்டுப் படைக்காமல் பூசையை முடித்துப்போய் விட்டவர்கள் புலவர்களுக்குத் தானோ பொங்கல் கொடுப்பார்கள்.

குருடர் பாடலைத் தொடங்கினார். “ஆங்கூர்ச் சிவனே, இரவும் பகலும் ஆட்சி நடத்துபவனே, நாங்கள் பசியோடு ருப்பது முறையா?” என்றார். அதற்கு முடவர், “சங்கும் முரசும் கொட்டும் முழங்கக் கேட்டதல்லாமல் சோறு கண்ட தெய்வம் எது?” என்று முடித்தார்.

"தேங்குபுகழ் ஆங்கூர்ச் சிவனேஅல் லாளியப்பா!

நாங்கள் பசித்திருக்க ஞாயமோ போங்காணும்! கூறுசங்கு தோல்முரசு கொட்டோசை அல்லாமல் சோறுகண்ட மூளியார் சொல்.”

தேங்குபுகழ் - மிகுந்தபுகழ். அல் ஆளி - இரவிலும் ஆளும். மூளி - உறுப்புக் குறையுள்ள

மனிதன்.