உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

56. இனியான்

திருவேங்கடம் என்பவன் இரக்கமுடையவன்; பெருங் கொடையாளன்; யாளன்; இரட்டைப் புலவர் மேல் பேரன்பு உடையவன்; அவன் இரட்டைப் புலவர்கட்கு அடிக்கடி பரிசு அளித்து மகிழ்வான்.

அவனுடைய அண்ணனாகிய கண்ணுக்கினியான் என்பவன் யாருக்கும் ஒன்றும் அளிக்கமாட்டான்; இரக்கம் இல்லாதவன். அவன் கண்ணுக்கு இனியவனே யன்றிக் காதுக்கு இனியவனோ நெஞ்சுக்கு இனிய வனோ அல்லன்.

கொடையாளியாகிய திருவேங்கடன் ஊரில் இல்லாத போது ஒருநாள் இரட்டைப் புலவர்கள் கண்ணுக்கினியானைச் சென்று கண்டனர். பரிசு கிடைக்கவில்லை. ஏமாற்றமடைந்த அவர்கள் அப்பொழுது பாடிய பாடல் சுவை யுடையது.

“தேன்

போல் மொழியும் திருவாயையுடை திரு வேங்கடத்துடனே ஏன் பிறந்தான் கண்ணுக் கினியான்?” என்பது முடவர் வினா?

66

“சீதேவியுடன் அவள் பிறந்த பாற்கடலிலே மூதேவி ஏன் பிறந்தாள்?” என்று வினாவி, அந்த வினாவாலேயே விடையையும் கூறிவைத்தார் குருடர்:

று

“தேன்பொழிந்த வாயான் திருவேங் கடத்துடனே ஏன்பிறந்தான் கண்ணுக் கினியானே - வான்சிறந்த

சீதேவி யாருடனே செய்யதிருப் பாற்கடலில் மூதேவி ஏன்பிறந்தாள் முன்.

வான்சிறந்த - மிகச்சிறந்த. தெய்வத் தன்மையால் சிறந்த. செய்ய – செவ்விய. சீதேவியும் மூதேவியும் உடன் பிறந்த கதையை உட் கொண்டு கூறினார்.