உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

161

59. LIITI

பாண்டிவேந்தன் வரதுங்கராம பாண்டியன் ஒரு பெருங் கவிஞன்; அவன் மனைவியும் கவியரசி; அவன் உடன் பிறந்த தம்பி அதிவீரராம பாண்டியனும் பெருங்கவிஞன்.

அதிவீரராம பாண்டியன் தென்காசியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தான். அவன் தன் அண்ணன் மேல் பகை கொண்டு படையெடுத்து வந்தான். அப் படையைக் கண்ட வரதுங்கராம பாண்டியன் பாண்டியன் மனைவி ஒரு பாடல் எழுதி அதிவீரராம பாண்டியனுக்கு அனுப்பினாள்.

"சூரியன் மகனாகிய சுக்கிரீவனையும், தென்னிலங்கை வேந்தனாகிய வீடணனையும், பாண்டவர்களில் ஒருவனான அருச்சுனனையும் உடன்பிறந்தாராக எண்ணாதே. அவர்கள் முறையே தம் அண்ணன் மார்களான வாலி, இராவணன், கன்னன் ஆகியோரைக் கொன்றனர். அவர்களைப்போல் இராமல் ‘உடன்பிறந்தார் என்றால் இப்படியல்லவோ இருக்க வேண்டும்' என்று பாராட்டுமாறு வாழ்ந்த பரதனையும் இராமனை யும் பார்" என்னும் பொருள் அப் பாடலில் அமைந்திருந்தது. அதனைக்கண்டஅதிவீரராமபாண்டியன் அமைதியடைந்தான்; போர் நின்றது. போரை நிறுத்திய புகழ்மிக்க பாடல் இது;

"செஞ்சுடரோன் மைந்தனையும் தென்னிலங்கை வேந்தனையும் பஞ்சவரிற் பார்த்தனையும் பாராதே - விஞ்சு

விரதமே பூண்டிந்த மேதினியை ஆண்ட

பரதனையும் ராமனையும் பார்.'

செஞ்சுடரோன்

சூரியன். பஞ்சவர் பாண்டவர் ஐவர். பார்த்தன்

அருச்சுனன்.

விஞ்சு விரதம் – சிறந்த விரதம், (இராமனைப் போலவே பரதனும் துறவியாக இருந்தமை). மேதினி – உலகம்.