உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விச் செல்வம்

முன்னுரை

செல்வம் தேட எவரும் விரும்புவர். செல்வங்களுள் பெருஞ் செல்வம் கல்விச் செல்வம். பொருட் செல்வம் இல்லாமல் முடியாது என்றாலும்,அருட் செல்வம் பிறவிப் பேறு என்றாலும், கேள்விச் செல்வம் பயன்மிக்கது என்றாலும் கல்விச் செல்வமே கண்ணாக மதிக்கப்படும். கண் கொண்ட பயனே கல்வி என்பதாம்.

கல்லாதவர்க்குக் கண்கள் இருப்பினும் அக்கண் களில் ஒளி இருப்பினும் அவை கண்கள் எனப்படா. கல்வி ஒளியைப் பெறவே கண்ணொளி என்பது இதனால் விளங்கும்.

கண்ணொளி இல்லார் கூட, கல்வி என்னும் உள்ளொளியால் கண்ணொளி பெற்றாரினும் சிறந்து விளங்குதல் கண்முன்னரும் வரலாற்றிலும் கண்டறியும் செய்திகளாம்.

நாம்

இக்கல்விச் செல்வம் இளமைப் பருவத்திலேயே

ஒவ்வொருவரும் பெற வேண்டும் ஒன்றாகும். அதனைத் தக்க வகை யில் பெறுதற்கு ஆசிரியரும் பெற்றோரும் உதவுதல் வேண்டும். அவர்களுக்குத் துணையாம் வகை யால் இக் கல்விச் செல்வம் என்னும் நூலை மாணவர் பதிப்பக உரிமையாளர் திருவாட்டி இ. வளர்மதியர் வெளியிட்டுத் தன் கடமை புரிந்துள்ளார்.

தவம் செய்வார் தம் கருமம் (கடமை) செய்வார் என்பது வள்ளுவம். இத் தவப் பணி சிறந்தோங்குவதாக.

அன்புடன்,

இரா.இளங்குமரன்