உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

167

65. அப்பாத்துரை

திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் அன்பர் அப்பாத்துரை முதலியார் என்பவர். அவர் பெயரை இறுதியடியாக வைத்துச் சுவையான ஒரு பாட்டுப் பாடினார் பிள்ளையவர்கள்.

சிவன் முடியில் இருப்பதுவும், சங்கமேந்தியாகிய திருமால் மேய்த்ததுவும், வெள்ளைக்காரர்களைக் குறிப்பதும், வணிகர்கள் சேர்த்து வைப்பதும், வந்தவரை வினாவுவதும் சேர்ந்தால் அப்பாத்துரை முதலியாராம்.

66

சிவன் முடியில் இருப்பது -அப்பு (கங்கை)

-

திருமால் மேய்த்தது ஆ

வெள்ளையர்களைக் குறிப்பது - துரை

வணிகர் சேர்த்து வைப்பது முதல் வந்தவரை வினாவுவது - யார்?

தாணுமுடி மேலதுவும் சங்கரிமுன் மேய்த்ததுவும் பேணும் சுவேதரையே பேசுவதும் - வாணிகர்கள் வைப்பா யிருப்பதுவும் வந்தவரைக் கேட்பதுவும் அப்பாத் துரைமுதலி யார்.'

தாணு - சிவபெருமான். சங்கரி - (சங்கு அரி) சங்கம் ஏந்திய திருமால். சுவேதர் -

வெள்ளை நிறத்தினர். வைப்பு - சேர்த்து வைப்பது.