உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

இளங்குமரனார் தமிழ் வளம் - 20

68. தத்தை

பாரதம் என்பது இந் நாட்டின் ஒரு பெயர். பாரதக் கதை இலக்கிய உலகில் உண்டு. பாண்டவர் துரியோதனர் வரலாறு கூறும் நூல். அது வடமொழியில் வியாச முனிவரும், தமிழில் வில்லிபுத்தூர் ஆழ்வாரும் பாடியுள்ளனர்.

பாரதத்தை முற்றும் முறையாகப் படித்துப் பார்த்தாராம் ஒரு புலவர்; அதில் முழுப் புலமையும் பெற்றாராம்; அதன் சாரத்தை அவர் வடித்துக் கூறுவதைக் கேட்க வேண்டுமாம்; மாலை அணிந் திருக்குமாம்; பச்சை வண்ணமாக இருக்குமாம்; இரண்டு சிறகு இருக்குமாம்; காலும் இரண்டு உண்டாம்; பறந்து போகுமாம்! நல்ல பாரதத்தைச் சொன்னார் எனத் தோன்றுகின்றதா? ‘பார - தத்தை' என்பதற்கு ‘பெரிய கிளி’ என்பது பொருள்! கிளிக்குக் கழுத்தில் மாலையும், உடலில் பசுமையும் சிறகும் காலும் உண்டல்லவா?

பறவாக் கிளி யுண்டோ? கூண்டுக் கிளியன்றி! இப் பாட்டைப் பாடியவரும் வேதநாயகம் பிள்ளையே.

“பாரதத்தை முற்றுமே பார்த்துணர்ந்த பண்டிதர்நாம் சாரமுற்ற அச்சரிதை தான்கேளீர் - ஆரமுற்ற தேகமெலாம் பச்சை; சிறகிரண்டும் காலிரண்டும் ஆகப் பறக்கும் அது.

பண்டிதர் - புலவர். சரிதை - சரித்திரம். ஆரம் - மாலை. தேகம் - உடல். பார பெரிய. தத்தை – கிளி.