உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

175

73. கறி வை

சிவஞான முனிவர் பெரும் புலவர்; கவிஞர்; சிறந்த உரையாசிரியர்; அவர் பாண்டி நாட்டு விக்கிரம சிங்கபுரத்தில் தோன்றி, திருவாவடு துறைத் திருமடத்தில் திகழ்ந்தவர். சைவ சாத்திரங்கள், தமிழ் இலக்கணம், வடமொழி இவற்றில் சிறந்த புலமையுடையவர். புகழ் வாய்ந்த மாணவர் பலர் அவரிடம்

பயின்று சிறப்படைந்தனர்.

சிவஞான முனிவர் பாடம் சொல்லுவதைக் கேட்டுக் கேட்டு அவர்தம் அவர்தம் சமையல்காரரும்

புலமையாளராகத் திகழ்ந்தனர். அவர்களுக்குச் சிலவேளைகளில் பாட்டாகவே இன்ன கறி செய்ய வேண்டும் என்று கட்டளையிடுவார். அவ்வாறு ஒரு பொழுதில் கூறியது வருமாறு:

“சற்றே துவையலரை; தம்பி! ஒரு பச்சடிவை; வற்றல்ஏ தேனும் வறுத்துவை; - குற்றமிலை காயமிட்டுக் கீரைகடை; கம்மென வேமிளகுக் காயரைத்து வைப்பாய் கறி.”

சற்றே - சிறிதே. காயம் - பெருங்காயம். கம்மெனவே

மணமிகவே. மிளகுக்காய்

மிளகாய்.