உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

இளங்குமரனார் தமிழ் வளம் - 20

72. படுக்கை

தத்துவப் பிரகாசர் என்பவர் ஒரு புலவர். அவர் உண்மைப் பொருள் ஆய்வில் ஊன்றியவர்; அவர் சாளுவ நாயகர் என்னும் அரசியல் அதிகாரி ஒருவரைக் கண்டார். அவர், பிரகாசர் படுப்பதற்கு ஒரு வீட்டைக்காட்டினார். பாயும் தலையணையும் அங்கே இருந்தன. நாயகர் சொன்னபடி பிரகாசர் அவ்வீட்டிற் போய்ப் படுத்துக் கொண்டார். விடியுமட்டும் உறங்கினாரல்லர். காலையில் நாயகர், 'புலவரே இரவு நன்றாக உறங்கினீரா?” என்று வினவினார். அதற்கு மறுமொழியாக ஒரு பாட்டுப் பாடினார் பிரகாசர்.

என்ன அழகான விடுதி! மூட்டை ஒரு கலம் இருக்கும்; புழுதி மூன்று கலம் இருக்கும்; பாயோ கிழிசல்; தலையணையோ வைக்கோல்! படுத்திருந்த பெருமையைச் சொல்லி முடியுமா?"

“மூட்டை கலம்; புகுதி முக்கலம்; சுத்தப்பாழ் வீட்டை விடுதியாய் விட்டாயே - போட்ட

தடுக்கெல்லாம் பீறல்; தலையணையோ வைக்கோல் படுக்கலா மோசொல்லப் பா.

கலம் - ஒரு முகத்தலளவை. 12 மரக்கால் அல்லது 48 படி கொண்ட ஓர் அளவு. தடுக்கு

– பாய். பீறல் – கிழிசல்.