உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

173

71. தட்டல்

திருநெல்வேலியில் அழகிய சொக்கநாத பிள்ளை என்றொரு கவிஞர் இருந்தார். ருந்தார். அவர் நகைச்சு அவர் நகைச்சுவையாகப் பாடுதலில் தேர்ந்தவர். அவரைக்காத்த வள்ளல் முத்துசாமிப் பிள்ளை என்பவர். அவரைத் தலைவராகக் கொண்டு கவிஞர் பல பாடல்கள் இயற்றினார். அவற்றுள் ஒரு பாடல் வருமாறு:

தேர்ச்சி பெறாத ஒருவன் மத்தளங் கொட்டு வதைக் கேட்டார். அவருக்கு அவன் கற்றுக்குட்டி நிலையை நினைக்க நகைப்பாக இருந்தது. அந் நகைப்பைப் பாட்டாக்கி உலாவரச் செய்தார்.

66

முத்துசாமி வள்ளலே!

இங்கே ஒருவன் ஓயாமல் மிருதங்கம் (மத்தளம்) தட்டினான்; அங்கங்கே கூடியிருந்த பெண்கள் எல்லாரும் எரு வாங்குவதற்காகக் கூடைகளை எடுத்துக் கொண்டு ஓடி ஓடி வந்தனர்; இக் காட்சியை நீ கண்டாயோ?” என்பது அவர் பாடிய பாடற்பொருளாகும்.

66

எங்கள்முத்து சாமிமன்னா! இங்கே ஒருவன்மிரு

தங்கமதை ஓயாமல் தட்டினான் - அங்கங்கே

கூடிநின்ற பெண்களெருக் கொள்வதற்குக் கூடையெடுத்(து) ஓடிவந்தார் நீபார்த்தா யோ?

மிருதங்கம் – மத்தளம். எருத்தட்டுவதுபோல் தட்டினான் என்பதாம்.