உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

70. கால்

திருக்குற்றாலத்தை அடுத்துள்ள செங்கோட்டையில் கவிராச பண்டாரத்தையா என்னும் பெய ருடைய புலவர் ஒருவர் இருந்தார். அவர் குற்றாலத் திற்குச் சென்று குழல்வாய் மொழி அம்மையுடன் கூடிய குற்றால நாதரை வணங்கினார். வணங்கி ஆர்வ மிகுதியால், "குற்றாலத்து ஐயா! உன்னைக் கண்டு அதன் பின்னே பிரிந்திருக்க மாட்டேன்; அம்மைக்கு உன் உடலில் பாதியை தந்து அம்மையப்பனாகினாய். எனக்கு அவ்வளவு வேண்டா; அதில் பாதி தந்தால் போதும்; அதைத் தந்து கண்பார்த்தருள்வாயாக” என்று வேண்டினார். அவ் வேண்டுதல் ஒரு வெண்பா ஆகியது.

உன் கால்

-

6

பாதியில் பாதி எவ்வளவு? 'கால்' தானே! இறை வனே திருவடி - அருள்! எனக்கு வேண்டி யது அவ்வொன்றே என்பதை எவ்வளவு நயமாகக் கூறியுள்ளார்! “அருவித் திரிகூடத் தையா! உனைநான்

மருவிப் பிரிந்திருக்க மாட்டேன் - ஒரு விமலைக்(கு)

ஆதியிலே பாதிதந்தாய்; அத்தகை வேண் டாமெனக்குப் பாதியில் பாதிதந்து பார்.’

திரிகூடம் – திருக்குற்றாலம். மருவி - கூடி. ஒருவிமலை - (ஒரு + விமலை) ஒப்பற்ற

உமையம்மை. ஆதியிலே - முன்னே.