உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

177

75. 5600)]

சிவப்பிரகாசர், கருணைப்பிரகாசர், வேலையர் என்னும் மூவரும் உடன் பிறந்தவர்கள். சிறந்த பாலவர்கள். வீரசைவர்கள். சிவப்பிரகாசர் கற்பனைக் களஞ்சியம் என்று பாராட்டப் படுபவர்.

சிவப்பிரகாசரும் கருணைப்பிரகாசரும் இயற்கை எய்தினர். இடையே பிறந்தவராகிய வேலைய அடிகள் தாம் இருக்கும் நிலையை எண்ணி வருந்தினார்.

ஒரு கரும்பை எடுத்தால் கணுக்கள் பல இருக்கும் கணுவுக்கு மேலும் கீழும் இருக்கும் பகுதியே கடித்துச் சாறு குடிக்கும் சிறப்புடையதாக இருக்கும். இரண் டிற்கும் இடையே உள்ள கணுவோ ஒதுக்கித் தள்ளப்படும். அதுபோல் என் மூத்தாரும் இளையாரும் ஆகியவர்களை உண்டுவிட்ட காலன், என்னைக் கணு என்று உண்ணாமல் விட்டுவிட்டான். என்று வருந்திக் கூறினார்.

66

‘அல்லிமலர்ப் பண்ணவனும் ஆராய்ந் தறிகவிதை

சொல்லும் இருவரிடைத் தோன்றியவான் - முல்லை அரும்பிற் பொலியும் அணிமுறுவல் நல்லாய்! கரும்பிற் கணுநிகர்த்தேன் யான்.”

அல்லி - தாமரை. பண்ணவன் - நான்முகன். இருவர் - மூத்தவர். இளையவர். முறுவல் -பல். நிகர்த்தேன் - ஒப்பானேன்.