உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

76. பத்து உரூபா

சீர்காழி அருணாசலக் கவிராயர் என்பவர் இராம நாடகக் கீர்த்தனை இயற்றியவர். அவர் பாப்பைய வேள் என்னும் வள்ளலைப் போய்க் கண்டார். அவருக்குப் பத்து ரூபா வேண்டி யிருந்தது. அதனைப் பாப்பையவேளிடம் கேட்டார். அவர் உடனே அதனைத் தராமல் தவிர்க்க முயன்றிருப்பார் போலும் அதனால் புலவர் விடாமல் தம் கருத்தை வலியுறுத் தினார்.

பத்துப் பிறப்பெடுத்த திருமாலுக்கு ஒப்பான பாப்பைய வேளே, உனக்கென்ன பத்து ரூபா எனக்குத் தரப் பஞ்சமாகி விட்டதா? முத்துப் போன்ற பல்லும் வீழிப்பழம் போன்ற வாயுமுடைய அம்மை வழங்கிய அமுதமுண்ட ஞானசம்பந்தர் பிறந்த சீர்காழியிலே பிறந்த புலவன் யான் என்றார்.

“பத்துரூ பாயனைநேர் பாப்பையவே ளேயுனக்குப் பத்துரூ பாயென்ன பஞ்சமோ? - முத்தநகை வீழிவாய்ப் பாலுண்ட வேந்தன் பிறந்தசீ காழியரு ணாசலன்யான் காண்.'

பத்து உருபு ஆயன் - திருமால். வேந்தன் ஞானசம்பந்தன். நகை - பல்.