உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

181

79. மிளகு சாறு

திருச்சிராப்பள்ளியைச் சார்ந்ததோர் ஊர் சோமரசம் பேட்டை என்பது. அவ்வூரில் திரிசிரபுரம் பெரும்பாவலர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை வாழ்ந்த துண்டு. அங்கே சுப்பம்மாள் என்றோர் அம்மையார் இருந்தார். அவர் வீட்டில் சுப்பையர் என்னும் புலவர் உணவு கொண்டார். உணவின் சுவை பாவலர் உணர்வை எழுப்ப ஒரு பாடலை இயற்றிப் பாராட்டினார். ஆறு சுவை விருந்தும் அற்றுப் போய்விடும். ஆனால் எட்டுச் சுவையுடைய பாடல் விருந்தோ காலமெல் லாம் சுவை குறைவது இல்லையே.

மிளகு சாறு என்றும் சாறு என்றும் சொல்லப் படும் உணவுத்துணைப்பொருள் ‘இரசம்' எனப் பட்டது. சோறு என்றாலே நெல்லரிசியால் ஆக்கப்பட்டதே சோறு எனப்படும். அது, அன்னம் என வழங்க லாயிற்று. எந்த ரசமும் இந்த ரசத்திற்கு இணையில்லை; அன்னம் என்னும் பறவையும் இவ் வன்னத்தைக் கண்டு வெளுத்துப்போகும் எனப்பாடினார்.

“சோம ரசம்பேட்டை சுப்பம்மாள் வைத்தரசம் காமரச மெல்லாம் கசக்குமே - நேமமுடன்

அன்னத்தைக் கண்டக்கால் அன்னம் வெளுப்படையும் என்னத்தைச் சொல்வேன் இனி.'

நேமம் – நியமம், முறை. அன்னம் - சோறு, பறவை.