உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

இளங்குமரனார் தமிழ் வளம் - 20

80. கண்டால் கதி

கடந்த சில நூற்றாண்டுகளில் இலக்கண இலக்கியக் கல்வியை மதியாமல் மெய்ப்பொருள் கூறும் வேதாந்தம் சித்தாந்தம் கற்றலே கல்வி என்னும் கருத்துப் பரப்பப்பட்டது. அப் பரப்பலால் இலக்கிய இலக்கணம் கற்பிப்பாரும் கற்பாரும் குறைந்தனர். அந்நூல்களும் பேணுவாரற்றுப் போய் அழிந்தன.

சின்ன நல்லப்பர் என்பார் ஒருவர். அவர் குருவார் நமச்சிவாயர் என்பார். அவரைக் கண்டால் போதுமே: கற்றலால் ஆவதென்ன என்று பாடினார்.

நன்னூல் காரிகை திவாகரம் முதலாய நூல் களைக் கற்பதால் பயனில்லை என்று கூறுகிறார் அவர்.

66

“நன்னூலும் காரிகையும் நன்றாம் திவாகரமும்

பன்னூலும் ஆராய்ந்து பார்ப்பதேன் - எந்நூலும் கொண்டாடும் தில்லை குருநமச்சி வாயர்முகம் கண்டாலும் உண்டே கதி.

என்பது அப்பாட்டு

நன்னூல் – எழுத்து, சொல் இலக்கணம். காரிகை - யாப்பு இலக்கணம். திவாகரம் – சொற்பொருள் நூல். தில்லை – சிதம்பரம். கதி – நற்பேறு.