உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

82. பொல்லார் நட்பு

நல்லவர்களைக் காணல், நல்லவர் சொல் கேட்டல், நல்லவர் குணங்களைப் பேசல், நல்லவர்களோடு நட்பாக இருத்தல் நலம் என்று நல்லோர் கூறுவர். நல்லவர்க்கு மாறான தீயோரைக் காணல், தீயோர் சொற்கேட்டல், தீயோர் குணங்களை உரைத்தல் தீயோரோடு இணங்கியிருத்தல் தீமை என்பதையும் அவர்கள் கூறினர்.

சண்பக மன்னார் என்னும் புலவர் தம்மிடம் பாடங்கேட்ட ஒருவர் தீயோர் தொடர்பினராக இருப்பது கண்டு வருந்தினார்.

அதனால், பொருள், புகழ், அருள், அழகு, தெளிவு ஆகியவை போகும் என்றும், கீழாம் தன்மை சேரும் என்றும் பாடினார்.

“பொருள்போம்; புகழ்போம்; புலைத்தன்மை சேரும்;

_

அருள்போம்; அழகுபோம்; அல்லால் - தெருள்போகும் கல்லாத நெஞ்சக் கயவர்பாற் சேர்ப்பிக்கும் பொல்லாத மாந்தர் புணர்ப்பு.

போம் - போகும். புலைத்தன்மை

கீழ்த்தன்மை. அல்லால் - அல்லாமல். தெருள் -

தெளிவு. கயவர் - கீழோர். புணர்ப்பு – நட்பு.