உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

187

85. முகட்டுப்பூச்சி

மதுரையில் கோபால கிருட்டிண ஐயர் என்றொரு புலவர் இருந்தார். நல்லியற் புலமையும், நகைச்சுவையாகப் பாடுந் திறமும் ஒருங்கு பெற்றவர். அவர்க்கு ஒரு நாள் மூட்டைக் கடி தாங்கமாட்டாத நிலையுண்டாயிற்று! அப்பூச்சியின் சிறுமையும் அதன் தொழிற் பெருமையும் புலவர் உள்ளத்தில் புயலாகக் கிளம்பி ஒரு ஒரு பாட்டாக வெளிப்பட்டது.

வெள்ளிப்

சிவபெருமான் கயிலாயத்திற்கு ஏன் போனான்?

பனி மலையாகிய

கருமுகில் வண்ணனாகிய திருமால் பாற்கடலுக்கு ஏன்

போனான்?

நான்முகன் தாமரை மலரை ஏன் தனக்கு உறை விடமாகக்

கொண்டான்?

எல்லாம் இந்த மூட்டைப் பூச்சி செய்யும் கொடுமையைத் தாங்கிக் கொள்ள மாட்டாமையால் தான்!

66

கண்ணுதலான் கைலையையும் கார்வண்ணன் பாற்கடலும்

எண்ணும் பிரமன் எழில்மலரும் - நண்ணியதேன்?

வஞ்சகமூட் டுப்பூச்சி வன்கொடுமைக் காற்றாதே அஞ்சிஅவர் சென்றார் அறி."

கருமுகில்

கண்ணுதலான் நெற்றிக் கண்ணையுடைய சிவன். கார் வண்ணன் வண்ணனான திருமால். எழில் மலர் - தாமரை மலர். ஆற்றாது - பொறுக்காது.