உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

இளங்குமரனார் தமிழ் வளம் - 20

84. தரம்

கவிமணி சிரங்கைச் சொறியக் கையிரண்டு போதாது என்று வேண்டினார் அல்லவா! இதோ அந்தச் சிரங்குகள் எத்தகைய மணிமாலைகளாகத் திகழ்கின்றன!

கவிமணி கூறுகின்றார்: புலவராகிய அவர்க்குச் சிரங்கப்ப ராயன் பரிசுப் பொருள் வழங்கி இருக்கின்றானாம். முத்து பவழம் வயிரம் மாணிக்கம் ஆகியவை மின்னும் பதக்கத்தைப் பரிசாக வழங்கியுள்ளானாம். எப்படி?

சில சிரங்குகள் நீர்க் கோத்து நிற்கின்றன; அவை, முத்துக்கள். சில நீர் வழிந்து புண்ணாக உள்ளன; அவை, பவழங்கள்; சில கருந்தழும்பு பட்டுள்ளன; அவை, வயிரம்; சில செந்தழும்பு பட்டுள்ளன; அவை, மாணிக்கம். இவையெல்லாம் கழுத்தில் படர்ந்துள்ளன. அப்படியானால் பதக்கந்தானே! கவிராயனுக்குப் பரிசு வழங்குபவனும் ஓர் இராயன் (அரசன்) தானே! அதனால் சிரங்கைச் சிரங்கப்ப ராயன் என்று கவிமணி சொல்லுவது எவ்வளவு பொருத்தம்!

“முத்துப் பவழம் முழுவயிர மாணிக்கம்

பத்திஒளி வீசு பதக்கமெலாம் - சித்தன் சிரங்கப்ப ராயன் சிறியேன் எனக்குத் தரங்கண்டு தந்த தனம்.

பத்திஒளி – வரிசையாகப் பதித்து வீசும் ஒளி. சித்தன் - மனத்து இருப்பவன். இராயன்

- அரசன். தரம் – தகுதி. தனம் – செல்வம்.