உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

189

87. வினாவிடை

திருவெண்ணெய் நெல்லூரில் வடிவேல் முதலியார் என்றொரு புலவர் இருந்தார். அவர் தம் ஊர்ப் பெயர் வருமாறு ஒரு வினாவிடை வெண்பாப் பாடினார். அப் பாடலின் முதல் மூன்று அடிகளில் வினாவும், இறுதியடியில் விடையும் அமைந் துள்ளன. அவ்வெண்பா அரிய பொருட்சுவை தருகின்றது.

தாமரையில் உறைபவள் யார்?

கண்ணன் விரும்புவது என்ன?

செஞ்சாலி என்று எதனைக் கூறுவர்?

வாழும் பதியைக் குறிக்கும் பெயர் என்ன?

இவற்றைச் சேர்த்தால் என்ன விடை வருகின்றது?

தாமரையில் உறைபவள் திரு

கண்ணன் விரும்புவது - வெண்ணெய்

சஞ்சாலி என்பது - நெல்

வாழும்பதி - ஊர்

-

சேர்த்தால் திருவெண்ணெய் நெல்லூர்.

“கஞ்சத் துறைபவள்யார்? கண்ணன் விரும்புவதென்? செஞ்சாலி என்றெவரும் செப்புவதென்? - எஞ்சலிலா(து) எண்ணும் பதிப்பெயரென் ஈசன்வாழ் கின்றதிரு வெண்ணெய்நெல் லூராம் விடை.”

-

கஞ்சம் – தாமரை. சாலி - நெல். எஞ்சலிலா - குறையாத. என் – என்ன.