உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

88. வாழல

சொற்களைச் சிதைத்துப் பேசுவதைக் கற்கண்டுப் பொங்கலாகக் கருதுபவர் மிகப் பலர். அத்தகைய பேச்சு ஒன்றைக் கேட்டு வருந்தினர் புலவர் வடிவேல் முதலியார். சொல்லைச் சிதைத்துப் பேசுவார்க்குச் சூடுவைப்பதுபோல் அப் பாட்டு அமைந்தது.

வாழை யிலை விற்கும் இளம் பெண்ணொருத்தி வாழலை! வாழலை!' என்று கூறிக்கொண்டு போனாள். அதைக் கேட்டார் புலவர். இவள் கணவன் வெறுத் தானோ? மற்றவர்கள் பகைத்தார்களோ? பெண் தன்மையைத்தான் இழந்து விட்டாளோ? நல்வாழ்வு கொள்ளவேண்டும் என்பதற்காக மணஞ்செய்து கொண்டகொடி போன்ற பெண் ‘வாழலை' என்று சொல்வது

என்?

"கொண்கன் வெறுத்தனனோ? கூடியுளார் தாம்பகையோ? பெண்மை இழந்தனளோ? பேசுவீர் - பண்புடனே வாழ மணம்பூண்ட வஞ்சி யவளின்று

வாழலையென் றேசொல் வகை.

கொண்கன் – கணவன். வஞ்சி - கொடி.