உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

191

89. உரை!

கம்பர் வீட்டிற்குச் சோமாசி என்னும் புலவர் ஒருவர் வந்தார். அவர் மிகச் செருக்குடையவராக இருந்தார். இதனைக் கம்பர் வீட்டு வேலைக்காரி உணர்ந்தாள். தாமே அவருக்கு நல்லறிவு உண்ட உண்டாக்கவேண்டும் என்று நினைத்து ஒரு விடுகதை கூறினார்; 'சோமாசி, உனக்கு ஒரு நாள் பொழுது தருகிறேன்; பின்பு நாளை வந்து விடைகூறு' என்று அனுப்பினார்.

என்ன விடுகதை சொன்னார்?

முழுமதிபோல் இருக்கும்; நெருப்புக் கொடி படரும்; மகளிர் கையில் கூத்தாடும்; சுட்டபின் ‘அரகரா' என்று சொல்ல வைக்கும் - இது என்ன?

“வட்டமதி போலிருக்கும் வன்னிக் கொடிதாவும் கொட்டுவார் கையினின்று கூத்தாடும் - சுட்டால் அரகரா என்னும் அம்பல சோமாசி! ஒருநாள்விட் டேன்ஈ(து) உரை.’

وو

வட்டமதி – முழுமதி. வன்னிக்கொடி - தீ. அரகரா என்னும் - ‘அரகரா' என்று சொல்லி நெற்றியில் பூசிக் கொள்ளச் செய்யும் (திருநீறு) இதன் பொருள் 'வறட்டி' என்பதாகும்.