உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி

205

7. செல்வாக்கு

கேள்வியைச் செவிச் செல்வம் என்பது வள்ளுவம். சொல்லை நல் வகையில் வாங்கிக் கொள்ளும் கூர்ஞ்செவி வேண்டும் என்பது திருவள்ளுவம். அது செல்வத்துள் செல்வம் என்பார்.

வள்ளுவக் கலைச் சொற்களுள் ஒன்று, செலச் சொல்லல் என்பது. அதனை ஏழு இடங்களில் ஆள்கிறார் (424, 686, 719, 722,724,728,730 என்பவை)

எண்பொருள வாகச் செலச் சொல்லல் நல்லவையுள் நன்கு செலச் சொல்லுவார்

கற்றார்முன் கற்ற செலச் சொல்லுவார்

என்று உடன்பாட்டிலும், “செலச் சொல்லாதார்” என எதிர்மறையிலும் செலச் சொல்லலைக் குறிப்பிடு கிறார்.

செவியுள் செலச் சொல்லல் என்னும் அளவினதா செலச் சொல்லல்! இல்லை; கருத்தில் பதிவாகுமாறு செலச் சொல்லல்; கடமையில் ஊன்றுமாறு செலச் சொல்லல்; தாம் கேட்டதைப் பிறர் பிறர்க்கும் செலச் சொல்லல்; பிறபிற இடங்களுக்கும் காலங்களுக்கும் செலச் சொல்லல்; என்று பலவாறு விரிக்கத் தக்கது இச் செலச் சொல்லல்.

வள்ளுவர் உள்ளங் கவர்ந்த இச் செலச் சொல்லல், பொது மக்கள் வாயில் தமிழ்கூறும் உலக அளவில் எப்படி வழங்கு கின்றது எனின் ‘செல்வாக்கு' என்னும் பெயரால் வழங்குகின்றது என்பதாம்.

செல்விருந்து போன்றது செல்வாக்கு. ஆனால் செல்வாக்கு என்பது புகழ், வாய்ப்பு என்னும் பொருள் களில் வழங்குகின்றது. செல்லும் சொல்லே செல்வாக் காம். வள்ளுவர் கூறும் செலச் சொல்லல் செல்வாக் காகப் பொருள் மாற்றத்துடன் வழங்கு கின்றதாம்.