உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

இளங்குமரனார் தமிழ் வளம் - 20

6. குறி கூறுதல்

குறி கூறுதல் என்பது என்ன? வருபவர் முகக்குறி செயற் குறி, வினாக்குறி இன்னவற்றைக் கண்டு அகக் குறி இன்னதெனக் றுவதே குறி கூறலாம். கோடாங்கி என்பது கோள் தாங்கி என்பதாம். கொண்ட கருத்தை உணர்ந்து சொல்வதே அப் பெயர்ப் பொருளாம். திருக்குறள் குறிப்பறிதல், குறிப்பறிவுறுத் தல் என்பவை இவ்வகையில் எண்ணத் தக்கனவாம்.

66

66

66

66

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்"

முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும்

'கூறாமை நோக்கிக் குறிப்பறிதல்”

ன்னவை குறிப்பறிதல் வள்ளுவங்கள்.

“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்”

என்பது பழமொழியே. “முயல் பிடிக்கும் நாயை மூஞ்சி யைப் பார்த்தால் தெரியும்”. என்பதும் அவ்வழியதே.

பொதுமக்கள் குரலும் பொய்யாமொழியார் குறளும் ஒத்துநடையிடும் இதனை ஆராயத் தோன்றுவ தென்ன? அது, திருக்குறள் வாழ்வியல் நூலே என்பது வாம்.