உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி

203

5. மடையன்

“தின்னி மாடன்” என்று சிலர்க்குப் பொருள் பொதிந்த பட்டம் வழங்கக் காண்கிறோம். 'பொந்தன்' என்றும் ‘வயிறன் என்றும் பட்டப் பெயர் பெற்றாரைக் காண்கிறோம். பாட்டால் புகழ்கொண்ட இராமனுக்கு எதிராகச் சாப்பாட்டால் புகழ்பெற்ற ‘சாப்பாட்டுராமனை'க் காண்கிறோம். இவைமட்டுமா?

சிலரைத் திட்டும் போது 'மடையன்' என்கிறோம். மடை என்பது என்ன? சோறு தானே! மடைப்பள்ளி, சமையற் கூடம்; மடை யன் சோற்றை நிரம்பநிரம்ப அடைக்கும் பெருந்தீனியன்; பெருந்தின்னி (பெருந் திண்டி); பெருந்தீனி; குண்டா போலும் வயிறன் - குண்டோதரன் (உதரம் - வயிறு); குண்டம் - பள்ளம்; ஆழ்குழி. “குண்டு கண் அகழி” என்பது புறப்பாடல்.

66

-

மாட்டுக்குப் போடும் தீனியை இரை என்பர்; சிலரை இரை போடுகிறார்; இரை எடுக்கிறார்” என்பர். மாடுபோல் தின்பவரைக் குறிப்பது இது.

-

திருவள்ளுவர் பெருந்தீனியரைக் “கழிபேர் இரை யான்” என்பார். உடல் நலத்தின் பெரும்பகுதி ஊண் முறை, அளவு என்பவற்றிலேயே உள்ளது. அவற்றைப் பேணிக் கொண்டார்க்கு “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு” என்பார். எதனால் எனில், முன்னே உண் டது அற்று - எரித்து - செரித்து விட்டது என்பதை அறிந்து உண்பவர்க்கு என்பார். மருந்து அதிகாரம் பத்துப்பாடல்களுள் ஆறுபாடல்களில் உணவு பற்றியே கூறிய தகவு அறியத்தக்கது. மற்றும் கள்ளுண் ணாமை என்றும் புலால் மறுத்தல் என்றும் கூறிய அதிகாரப் பொருள்களும் வள்ளுவர் உடல்நலக் கொள்கை விளக்கங்களேயாம்.

'அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு'

“நொறுங்கத் தின்று நோயகற்று"

وو

என்பவை பழமொழிகள். இப்படி வழங்குவன வட்டாரம் தோறும் உண்டு.