உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

“கொடியதில் கொடியது, வறுமை”

என்றார் ஔவையார்.

66

"இன்மையின் இன்னாதது யாதெனில் இன்மையின் இன்மையே இன்னா தது

என்றார் வள்ளுவர்.

66

இதனைக் கூறிய நல்குரவு (வறுமை)ப் பகுதியில்,

'நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்"

என்று வள்ளுவர் கூறுவது எண்ணத் தக்கது (1046)

"நற் பொருளையே கூறுகிறார்; நன்றாக உணர்ந்தே கூறுகிறார். ஆனாலும், அவர் வறியராக இருப்பதால் அவர் சொன்ன சொல்லும் அதன் பொருட் சிறப்பும் சிறப்புப் பெறாமல் புறக்கணிக்கவும் தள்ளவும் பட்டு விடுகின்றன” என்கிறார். நடைமுறை உண்மை அல்லவா!

து

ஒரே சொல், சொல்பவரைக் கொண்டு கொள்ளவும் தள்ளவும் படுதல் காணக் கூடியவை தாமே! ஒருவன் கால மெல்லாம் ஆராய்ந்து கருதிக் கருதிச் சொல்லும் சொல்லையும் செய்தித்தாள் அறிந்துகொள்வதில்லை; வானொலிக் காது, கேட்பதில்லை தொலைக்காட்சிக் கண், காண்பதில்லை. அறிவாளர்களும் செவி சாய்ப்ப தில்லை.

-

பணம் பதவி பட்டம் பகட்டு உடையார் சொல்லும் கவைக்குதவாததாய் - கருத்தொடு கூடாததாய் இருக்கும் சொல்லும், கொட்டை எழுத்துகளில் காணப்படுகின்றன அல்லவா! எங்கும் போலிமை! எல்லாம் போலிமை ஏதோ பெயருக்கு ஒன்றிரண்டு உண்மைகள்!

இந்நாளில் பெருக்கமாக விளங்கும் இதன் அகவை, வள்ளுவர் நாளுக்கு முற்பட்ட பழமையது அல்லவா! அவர் காலத்தில் காணாத அளவு ன்று வேண்டுமானால் பெருக்கமும் பளிச்சீடும் பெருகி இருக்கலாம்; அவ்வளவே! ல்லை எனின், வழிவழி வாய்ச்சொல் ஆகி இராதே.