உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி

201

4. ஏழைசொல்

ஏழை சொல் அம்பலம் ஏறுமா? என்பதொரு பழமொழி. ஏழை சொல் ‘அரங்கம் ஏறுமா’ என்பதும் அது. வறியவர் தம்மை நொந்து கொள்ளும் உரை இது. ஒன்றன் இரட்டை நடைகள் இவை.

“ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்” என்பதும், பழமொழியே. மோழை என்பதுகொம்பில்லாக்கடா. மொட்டைக் கடா என்பதும் அது.

செல்வர்களும் பதவியாளர்களும் தவறும் பழியும் செய்தாலும் தப்பித்துக் கொள்வதும், வறியவர்கள் அதே தவற்றையும் பழியையும் செய்தால் மாட்டிக் கொள்ளப்பட்டு நலிவதையும் ஒருவமை வழியே காட்டுவார் அறிஞர் மு.வ.

புலவுக் கடையில் ஒரு தட்டில் புலால் உள்ளது. அதில் இருந்து ஒரு துண்டைப் பருந்து ஒன்று தூக்கிக் கொண்டு பறந்துவிடுகின்றது. மற்றொரு துண்டை ஒரு நாய் கௌவிக் கொண்டு ஓடுகின்றது. கடைக்காரன் மேலே பறந்த பருந்தைப் பார்த்து விட்டு ஒன்றும் செய்யாது இருந்துவிட்டான். ஆனால், கட்டைத் தடியை எடுத்துக் கொண்டு நாயை வெருட்டி வெருட்டி அடித்தான்! பதவி பணம் உடையவர் தவறு செய்து விட்டுத் தப்புவதையும், அதே தவற்றைச் செய்து வறியவர் மாட்டிக் கொள்வதையும் இக் காட்சி கொண்டு விளக்குவார்.

செல்வத் தோற்ற முடைய புலவர் பெறும் சிறப்பை யும் அஃதில்லார் பெறும் புறக்கணிப்பையும் கண்ட புலவர் ஒருவர், விரகர் ஒருவர் புகழ்ந்திடவே வேண்டும்;

66

விரல் நிறைய மோதிரங்கள் வேண்டும்; அரையதனில் பஞ்சேனும் பட்டேனும் வேண்டும்; அவர்கவிதை

நஞ்சேனும் வேம்பேனும் நன்று”

என்று அவர் பாடியமை தனிப்பாடல் திரட்டில் உண்டு.