உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

பின்னாளில் ‘தந்தி’ என்னும் பெயரால் இதழ் வந்தது. அதனால்,தந்தியில் செய்திபோட வேண்டிய தில்லை; அவனுக்குச் சொன்னால் போதும்; ஊருக்குப் பரப்பிவிடுவான் என்றனர்.

ல்லாத பொல்லாத வற்றையும் இணைத்துக் கூறுவதால் அவனையும் அச் செய்தியையும் ‘வதந்தி’ என்றும் கூறினர். ‘வராத தந்தி’ சுருங்கி ‘வதந்தி’ ஆயிற்றாம்.

இறந்தவர்களின் இமை ஆடுவது இல்லை; அதனால் இறந்தவரை ‘இமையார்' என்றனர். பின்னர் அது தேவர்களுக்கு ஆயது. அவர்கள் இமைக்க மாட்டார்க ளாம்! இமையாதவர்களாகிய அவர்களை ஒரு புலவர் கற்பனை செய்தார்! “ஏன் இவர்கள் இமைப்பதில்லை?” எனத் தமக்குள் ஒரு வினா எழுப்பினார். ஒரு முடிவுக்கு வந்தார். “முன்னே புகழ்ந்து விட்டுப் பின்னேபோய்ப் பழிப்பாரை அஞ்சியே தேவர் விழித்திமையார் நின்ற நிலை” என்றார். அது,

66

'அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க் குய்த்துரைக்க லான்”

(1076) என்பது.

வாயால் சொல்லுவார் இருக்கட்டும்; என் கண்ணே என்னைக் காட்டிக்கொடுத்து விடுகிறதே என்னும் தலைவி,

"மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால், எம்போல்

அறைபறை கண்ணார் அகத்து

என்கிறாள் (திருக்.1180).

இவற்றால் வள்ளுவம் பொதுமக்கள் வாய்மொழி யாகப் பெருக வழங்கப் பெறுதலை நன்கு அறியலாம்.