உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

> பொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி

207

வடுப்படுதல்:

8. சுடுசொல்

“யாகாவார் ஆயினும் நாகாக்க" என்றார் திருவள்ளுவர். ஏன்? நாவினைக் காவாமல் சொல்லும் சொல் பயக்கும் தீமைக்கு

எல்லை இல்லை. “பல்லக்கு ஏறுவதும் சொல்லாலே, பல் உடைபடுவதும் சொல்லாலே" என்பதும் பழமொழி.

தீயபுண்ணுக்கும் தீய புண், தீய சொல்லால் உண்ட ஆறாப் புண்ணே என்றும் வள்ளுவர் கூறுவார். மேலும்,

“தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்

என்றும் விளக்குவார்.

கும்

தீயால் நன்மை உண்டாகும் பகுதி நிரம்ப உண்டு. ஆனால் தீயவற்றால் நன்மை உண்டாவது இல்லை என்பது மட்டும் இல்லை மாறாத் தீமையும் உண்டாம் என்பது எவரும் அறிந்தது.

பொதுமக்களும் தீய சொல், தீச்சொல் என வழங்கு கின்றனர். இன்னும் விளக்கமாகச் ‘சுடு சொல்' என்றும் சொல் கின்றனர். ஒருவர் சொல்லும் சொல்லைக் கேட்டு வெறுத்துச் சொல்லுவாரிடம் என்ன நான் சொன்னது வடுப்பட்டுப் போயிற்றோ - வடுப்பட்டு விட்டதோ என்று கூறுவதை நாம் கேட்கவே செய் கிறோம்.

-

வள்ளுவர் வாய் மொழியை வாங்கி வழிமொழியும் சொற்கள் அல்லவோ சுடுசொல்; வடுப்படல் என்பவை.

66

ஒன்றானும் தீச்சொல்

பொருட்பயன் உண்டாயின்

நன்றாகா தாகி விடும்”

என்பது வள்ளுவமே.