உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

இளங்குமரனார் தமிழ் வளம் - 20

9. பொருட்டு

பொருளின் இன்றியமையாமையை, "பொருளில்லார்க் கிவ்வுலகம் இல்லை” என்றும்

"பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்ல தில்லை பொருள்" என்றும்

“பொருள் என்னும் பொய்யா விளக்கம்”

என்றும் மொழிகின்றார் பொய்யாமொழியார்.

“பொருளான் ஆம் எல்லாம்” என்று யாருக்கும் எதற்கும் உதவாத கருமிகளையும் குறிக்கிறார். இப் பொருட் சிறப்பைப் பொதுமக்கள் உணராமல் இல்லை.

“நான் அவரைப் பார்க்கப் போனேன். அவர் என்னை ஒரு பொருளாகக் கருதவில்லை” என்றும், “என்னைப் பொருட்டாக மதிக்கவில்லை” என்றும் வருந்தி யுரைக்கும் உரையிலே பொருட் சிறப்புப் புலப்படவே செய்கின்றது.

பொருட்டாகஎன்பது என்பொருட்டாக,அவர்பொருட்டாக எனவும் வழங்குகின்றது. பொருள் உடையது பொருட்டு என்பது எளிமையில் அருமை யாய் விளங்குகின்றதாம்.

தெனாலிராமன் ஒரு விருந்துக்குச் சென்றான். அவன் உடையின் அழுக்கையும் கிழிசலையும் கண்டு உள்ளே விடவில்லை. அவன் வீட்டுக்குத் திரும்பினான். பட்டுடை, பட்டுச்சட்டை அணிந்தான். விருந்து மண்டபத்திற்கு மீண்டும் சென்றான்.வருக வருக என வரவேற்றனர். உயர்ந்த இடத்தில் இருக்கச் செய்தனர். பணிவுடன் பரிமாறினர். தெனாலி எண்ணினான். இவ்விருந்து எனக்குத் தரப்படவிவில்லை. இவ்வுடையின் பொலிவுக்கே தரப்பட்டது என்று. அதனால் சட்டையைக் கழற்றி அதன் பையில் சோறு கறிகளைத் தின்னு தின்னு என்று செலுத்தினான். பின்னர் உடை மதிப்பை ஊரறியச் சொன்னான். “ஆடை பாதி ஆள் பாதி” என்பதும், “காசேதான் கடவுளடா என்பதும் மக்கள் வழக்குகள். இவை பொருட்டு என்பதன் விளக்கம்.