உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

66

12. முளையிலே கிள்ளல்

இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து”

என்பது வள்ளுவம். பகை, மாறுபாடு முதலியவை தோன்றும் எனின் தோன்றும் போதே அழித்துவிட வேண்டும். அதனை வளரவிட்டால் பின்னர் அதனை அழிக்க நினைப்பாரை அது அழித்துவிடும் என்பது இதன் பொருள். பகைத் திறம் தெரிதல் குறள் இது.

ஒரு நோய் தொடங்குகிறது; தொடங்கும் போதே அதனை அழிக்கத் தவறினால் ஆளையே அழித்து விடுகிறது அல்லவா!

வீட்டுள் ஒரு மனத்தாங்கல் அதனை உடனே பேசித் தீர்க்கத் தவறினால் குடும்பமே அலைக்கழிந்து போகிறது அல்லவா!

ஒரு கருவி அல்லது பொறி பழுதாகின்றது. அப் பழுதை உடனே னே நீக்காவிட்டால் அக் கருவி, அல்லது அப்பொறி கெட்டொழிந்து போகின்றது அல்லவா!

ஆனபின்னே ஐயோ என்று ஆவதென்ன?

போனபின்னே புலம்பிப் பயனென்ன?

இவ்வுயரிய கருத்தைப் பொதுமக்கள் வாய் எப்படிப் புகல்கின்றது. முளையிலேயே கிள்ளி எறிதல் என்கிறது. இளைதாக முள்மரம் கொல்லல் என்பது முளையிலே கிள்ளல் என்று உருக் கொள்கிறது.

L

உழவு நிலத்தில் ஒரு முட்செடி முளைத்துவிட்டால் உடனே பிடுங்கி எறிவர். அவ்வாறு செய்யத் தவறினால் அது வளர்த்து பெரிதாகி நிலப்பரப்பை வளைத்து விளைவைக் கெடுத்துவிடும்.