உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி

211

11. இருக்கிறார்

ஒருவரைப் பார்த்து ‘ஓர் ஆள் என்று இருக்கிறார்’; ‘ஏதோ பேர்க்கு இருக்கிறார்'. என்பது பொதுவழக்கில் உள்ளதாம். வாழ்கிறார் என்பதற்குரிய செயற்பாடு எதுவும் இல்லாமல் இருப்பவரைக் குறித்தது இது.

இப்படிப்பட்டவர் இன்று மட்டுமா உள்ளனர். எங்கேயும் எப்போதும் இருந்திருக்கத் தானே செய்வர்.

அத்தகையர் வாழ்வு வாழ்வாகாதே. வசையொழிய வாழ்வாரே வாழ்வார்; வாழ்வாங்கு வாழ்பவரே வாழ்வார்; உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; இன்னவாறு சொல்பவர் அல்லரோ திருவள்ளுவர். அவர் இத்தகையர் வாழ்வை எப்படி மதிப்பிடுகிறார்.

“உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களரனையர் கல்லா தவர்”

L

என்கிறார். உயிரோடு இருக்கிறார் என்னும் அளவை யன்றி வேறுவகையில் இல்லாதவர் அவர். நிலம் என்னும் பெயரைக் கொண்டும் விளைவுக்குப் பயன்படாக் களர்நிலம் போன்றவர். அவர் எவர் எனின், கல்லாதவர் என்கிறார். மூச்சுவிடுதற்காக மட்டுமே இருப்பவரை ‘உயிர்ப்ப உளர்' என்றும் கூறுவார்.

"பேருக்கு இருக்கிறார்” “ஓர் ஆள் என்று இருக்கிறார்” என்னும் பொதுமக்கள் குரல், 'உளரென்னும் மாத்திரையர்' என்றும் ‘உயிர்ப்ப உளர்' என்றும் சொல்லப்படுகின்றனவாம்.