உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

13. குருடு

கல்வியைக் கண் என்பது வள்ளுவம். “கண்ணுடையவர் என்பவர் கற்றோர்” என்னும் அவர், அக்கண்கள் இரண்டனை எண்ணி,

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு

என்கிறார். "எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்பது ஒளவை மொழியாயிற்று.

படியாத ஒருவர்க்கு வீடு தெரிகிறது, மாடு தெரிகி றது; மரம் தெரிகிறது, மட்டை தெரிகிறது; கண்பார்வை இருந்தும் எழுதிய எழுத்தைப் படிக்க முடியவில்லை. தமக்குரிய பெயரை எழுதவும் முடியவில்லை. கீறல், கைரேகை எனச் சொல்ல இருக்கின்றார்.

அவர்க்கு வந்த கடிதத்தைப் படிக்கத் தெரியாமல், அவர் ஏறவேண்டிய வண்டி எண் தெரியாமல் பக்கத் தில் உள்ளவரைப் பார்வையில்லாதவராய்க் கேட் கிறார்.

'நான் குருடன்' என்று தம்மை அறிமுகமும் செய் கிறார். குருடாக இருப்பது வள்ளுவத்தில் குற்றம் எனக் கூறப்படாது. ஆனால் பார்வை இருந்தும் கல்விக் கண் கண் இல்லாராய் இருப்பாரை விலங்கு என்று அது கூறும். விலங்குக்குக் கண் இருந்தும் அக்கண்ணால் எழுத்தைப் படியாது அல்லவா! விலங்கு விலங்காக இருப்பதில் குறையில்லை. ஒளி இழந்தவர் அந்நிலையில் இருப்ப தும் குறையில்லை. ஆனால் ஒளிபெற்றும் கல்வி அறியாதவர் விலங்கினும் இழிந்தவரே யாம். பெற்றும் குருடரே யாம்! அவரே ஏற்கும் - ஒப்பும் - தாழ்நிலை யல்லவா இது.

கண்

வள்ளுவர் மொழி, கல்லார் வாயிலும் வருவதே

‘நான்குருடு' என்பதாம்.