உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

15. பசியாற்றல்

‘குடியேற்றப் பாதுகாப்பு' என்பதொரு சொல்லியல் முறையும், பண்பாட்டு முறையும் உண்டு. தாய் மண்ணின் பழவழக்கு, தாய்மண்ணில் இல்லாமல் மறைந்து போயிருக்கும். ஆனால் நெடுநாள்களுக்கு முன்னர்ப் புலம் பெயர்ந்து வேறிடத்துக் குடியிருப்பார் வழக்கில் அச் சொல்லும் அப் பண்பாடும் ஒழியாமல் காக்கப்பட்டிருக்கும். இதனைக் குடியேற்றப் பா காப்பு என்பார் பாவாணர்.

து

காலையில் உண்ணும் உணவைச் சிற்றுண்டி என்பதும், நண்பகல் உண்பதைச் சாப்பாடு என்பதும் நம் வழக்கம். ஆனால் மலையகத்தில் உண்பதைப் பசியாறல் என்பது வழக்கு. ஒருவரை ஒருவர் காணும் போதும் பேசும் போதும் கேட்கும் முதல் வினாவே ‘பசியாறிவிட்டீர்களா' என்பதே யாம். இவ்வழக்கு பழமையானது என்பது சங்க இலக்கியங்களாலும்

திருக்குறளாலும் நன்கு விளங்கும்.

66

“ஆற்றுதல் என்பது அலந்தவர்க்கு உதவுதல்” என்பது கலித்தொகை. ஆபுத்திரனாரும் மணிமேகலை யாரும் வள்ளலாரும் கண்ட பேரறப்பணி பசி ஆற்று தலேயாம். வள்ளுவர் பசியாற்றுதலை அருமையாகச் சொல்கிறார்.

66

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்; அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்'

என்பது அது.

தம் பசியைப் பொறுத்துப் பிறர்பசியாற்றுதலும் பசி யாற்றலே; தாமும் உண்டு பசித்தாரும் உண்டு பசியாறு தலும் பசியாற்றலே. அவ்வாறு பசிப்போர்க்கு அப்பசி வாராவகையில் அவரே தேடிக் கொள்ள வழிகாட்டல் பசியாற்றலின் மேம்பட்ட ஆற்றலே என்பது வள்ளுவ விளக்கமாம்.