உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி

217

மக்களுள்ளும் விதை நெல் போன்றவரும் உளர். அவர் உலகம் வாழ வாழ்பவர். அவர்களால்தான் உலகில் பண்பாடு காப்பாற்றவும் வளர்க்கவும் படுகின் றது. அத்தகையர் வித்தகர் (வித்தின் தன்மை அமைந்தவர்) என்பது வள்ளுவம். அவ்வித்தகரைப் பேணலும், அவர்வழியில் நிற்றலும் உலக நலம் என்பதால் "பண்புடையார்ப் பட்டுண் டுலகம்” என்றும் கூறினார்.