உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

இளங்குமரனார் தமிழ் வளம் - 20

16. பகுத்துண்ணல்

சான்றோர் உலகுக்கென வகுத்துத் தந்த செய்திகளில் தலையாய ஒன்று 'பகுத்து உண்ணல்' என்பது. இதனைத் திருக்குறள்

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

(322)

என்று சிறப்பிக்கும். இப்பாடல் விருந்தோம்பலில் வருவதன்று. ஒப்புரவு கண்ணோட்டம் ஆகியவற்றில் வருவதும் அன்று. ஈகையில் வருவதும் அன்று; கொல்லாமையில் வருவது. ஏன்?

பசி என்பது பிணி; அது, 'பசிப்பிணி' என்றும் ‘பசி நோய்' என்றும் சொல்லப்படும். அப்பசிப்பிணி அகற்றும் மருந்து உணவு ஆகும். ஆதலால் பசித்துயர் தீர்ப்பாரைப் 'பசிப்பிணி மருத்துவர்’ என்பது சங்கநூல் ஆட்சி. “பசிப்பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ சேய்த்தோ?” என்பது கிள்ளிவளவன் வினா? (புறம்.)

பசிநோய் கொல்லலும் கொலைதானே! அதனால் பசியகற்றுதலைக் கொல்லாமையில் வைத்தார் வள்ளுவர்.

பகுத்துண்ணல் என்பது, "படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும் உடைப்பெரும் செல்வர்க்கே உரியது அன்று. வறியர்க்கும் ஆவது; ‘யாவர்க்குமாம் ஒரு வாயுறை என்பாரே திருமூலர். அவ்வாறு அனைவர்க்கும் ஆவது.

உண்ணும் அளவு மட்டுமே உணவு உள்ளது. அந்நிலையில் பசித்தார் வருகிறார். இருக்கும் உணவைப் பகுத்து அவருக்கு வழங்கித் தாமும் உண்பதே பகுத்துண்பது ஆகும். இவ்வினிய பருநெறியைப் பொதுமக்கள் வாய் எப்படிப் புகழ்பட மொழிகின்றது?

“பகுந்து சாப்பிட்டால் பசியாறும்” என்கிறது. ‘பகுத்துண்டு ஓம்புதல்' பொதுமக்கள் பொருளாகி எளிமையாய் விளக்கு கின்றது அல்லவா!