உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி

221

17. துப்புக் கெட்டவன்

'அறம்' என்பது திருக்குறளுக்குரிய பழைய பெயர்களுள் பழையது. அறத்தை ஊடகமாகக் கொண்டு உரைக்கப்பட்டதே திருக்குறள். அறநெறிக்கு மாறான நெறி தலைகாட்டுவதைக் கடுமையாகக் கண்டித்துக் கூறுவதும் திருக்குறள் நெறி.

ஒருவன், வறிய ஒருவனுக்கு அவனுக்குத் தேவையாம் ஒன்றைக் கொடுக்கின்றான். அவ்வாறு கொடுப்பவனை ஒருவன் தானே வலிந்து போய்த் தடுக்கிறான். தானும் கொடாமல், கொடுப்பவனையும் கொடுக்க விடாமல் தடுப்பவனைக் கண்ட அளவில் வள்ளுவர் இளகிய உள்ளம் கடுமை கொள்கிறது. கண்டித்துச் சாவிப்புக் (சவிப்புக்) கூறுகின்றது.

“கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்'

(166)

என்கிறது. வ்வாறு, ஆக்கம் செய்வாரையும் அடுத்துத் தடுக்கும் கேடரை நல்லுள்ளம் பழித்தல் இயற்கையேயாம். பொதுமக்கள் வழக்கில் இக்காட்சியுரை வழங்கவே செய்கின்றது. கேடு செய்து கெடு வாரைத் 'துப்புக் கெட்டவன்' என்பதை நாம் கேட்ட தில்லையா? துப்பு என்பது என்ன? ‘துய்ப்பு' என்பது துப்பு ஆயது. துய்ப்புக் கெட்டவன் என்றால் உணவு - நுகர்வு - இல்லாமல் ஒழிந்தவன் என்பதாம்.

"துப்பார்க் குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை

-

(12)

என்பது துப்பின் வள்ளுவ விளக்கம் அல்லவா! துப்புரவு என்பது உணவு நுகர்வு என்னும் பொரு ளினவையே. (திருக். 263, 378,

1050).

-

ஒன்றை ஒருவர் கேட்கிறார்.அதனை இல்லாதவர் ‘துப்புரவாக இல்லை' என்கிறார். துப்புரவாக என்பது முழுவதாக - முற்றாக - என்னும் பொருளது.

உணவு இல்லாமை ஒன்றே ‘முழுவதாக இல்லை' என்பதை விளக்கும் சான்றாம்.