உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

18. நிலக்கிழார்

கிழமை என்பது உரிமை என்னும் பொருளமைந்த பழஞ்சொல்; மண உரிமை, மனை உரிமை, நில உரிமை, ஆட்சி உரிமை எனப்பலவாய உரிமை குறிக்கும் சொல் அது. கிழவன் என்பதன் பெண்பால் கிழத்தி என்பது. இவ்வுரிமைகள் எல்லாம் ஒன்றற்கு ஒன்று தொடர் புடையவை என்பது வெளிப்பட விளங்குவன.

உழவன் தன் நிலத்தைப் பல்காலும் சென்று பார்த்துச், செய்யும் செயல்களை எல்லாம் தவறாது செய்தால், எதிர்பார்த்த பயனுக்கு மேலும் கிடைக்கும். இல்லையேல் போட்ட முதலும் அற்றுப் போகும். இதனைக் கூறவரும் உழவு பாடிய கிழவர் திருவள்ளுவர், மனைக் கிழத்தியுடன் நிலக்கிழத்தியை இணைத் துக்கூறி இனிக்கச் செய்கிறார். அது,

66

"இலமென் றசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்”

எனப்பொது வகையாலும்,

“செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும்

எனச் சிறப்பு வகையாலும் அவரால் கூறப்படுகின்றது (1040,1039)

நிலக்கிழார், பெருநிலக் கிழார் வழக்கை அறிய வேண்டுமா? இந்நூல் திருமண அழைப்பைப் பார்த்தால் போதுமே!

-

திருமணத்திற்கு அழைப்பார் உழவுத் தொழிலர் நில உடைமையாளர் எனின், நிலக்கிழார், பெருநிலக்கிழார் என விருது, பட்டம் போல் போடுவது இல்லையா? ருது,பட்

கிழவன் உரிமையாளன் என்றால் கிழத்தியும் உரிமையாட்டி தானே! மனை உரிமை போலவே நில வுரிமையும் ஆட்சி உரிமையும் பால் வேறுபாடு காணாமல் இருந்த முன்னோர்