உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

19. கூலி

என் குடும்பத்தை உயர்த்தி ஆவேன் எனத் துணிவோடு உழைப்பவனுக்கு உதவத் தெய்வமே துணிவுடன், துணியை வரிந்து கட்டிக் கொண்டு ஓடிவந்து முன்னிற்கும் என்பது வள்ளுவம். மேலும் துணைக்கு வரும் தெய்வமே துணை செய்யாததுடன் தடுப்பதாக முன்னின்றாலும் நீ விடாது முயற்சி செய்; ஓயாது உழை; உழைப்புக்குக் கூலி இல்லாமல் போகாது; கிடைத்தே தீரும் என்றும் கூறுகிறார் திருவள்ளுவர்.

அவை,

“குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்

"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்"

என்பவையாம்.

“உழைப்புக்குக் கூலி இல்லாமல் போகாது”

“பட்டபாட்டுக்குக் கூலி இல்லாமல் போகாது”

(1023)

(619)

என்பவை பொதுமக்கள் வாயில் இருந்து கேட்கக் கூடியவை. இவை எளிமையில் அருமையாய் வள்ளுவக் கருத்தை வழங்கு கின்றன.

L பழநாளில் முயற்சி உழைப்பு என்பவை உழவாகவும் உழவு சார்ந்தனவாகவுமே அமைந்தன. அந்நாளில் ‘பண்டமாற்றே’ வணிகமாகவும் இருந்தது. அண்மைக் காலம் வரை சிற்றூர் வழக்கு அப்படியே இருந்தது. அதுபோல் உழவர் விளைவித்த கூலம் (தவசம்) அவ்விளைவுக்கு உதவிய உழைப்பாளர்க்கு உழைப்பு ஈடாகத் தரப்பட்டது.கூலமாகத் தரப்பட்ட அது கூலி எனப்பட்டது. கூல வாணிகம் செய்த சீத்தலைச் சாத்தனார்