உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

இளங்குமரனார் தமிழ் வளம் - 20

20. பொச்சாப்பு

'பொச்சாவாமை' என்பதோர் அதிகாரப் பெயர் (54); புறத்திரட்டிலும் இப்பெயரால் ஓர் அதிகாரம் உண்டு (62).

பொச்சாப்பு என்பது “மிகுந்த இன்பக் களிப்பால் ஏற்படும் மறதி” என்றும் (531) “புகழைக் கொல்வது” என்றும் (532, 533) கூறுவார் திருவள்ளுவர். மேலும் பொச்சாப்பு தம் மகிழ்ச்சியால் மயங்குவது என்றும் (539) கூறுவார்.

இயல்பாக எழும் நகை வேறு; பொய்யாக எண்ணிச் செருக்கால் கொள்ளும் நகை வேறு; பொய்யாக எழும் நகையைப் ‘பொய்த்து நகை' என்பது வள்ளுவம் (182).

பொய்த்து ஆர்ப்பது எது, அது பொச்சாப்பு.

புகழ் என்பது ஒருவர் பண்பாலும் செயலாலும் அவரைத் தேடிப் புகுவதாகும். தானே புகுவதை அன்றித் தேடிப் போவதால் அடைய முடியாதது அது. ஆனால், இல்லாப் புகழையும் இருப்பதாக இட்டுக் கட்டி மகிழும் மகிழ்வே பொய்த்து ஆர்ப்பு (பொச் சாப்பு) ஆகும். அது, ஏதாவது ஒரு புகழ் இருக்கு மாயினும், அதனையும் அழித்துவிடும்.

இப் பொருள் புரிவரோ, புரியாரோ! ஆனால், இதனைப் பொதுமக்கள் வழங்குதல் கண்கூடு. நெல்லை முகவை மாவட்டப் பரப்பில் கேட்கப்படுவது இது.

66

உன் ‘பொச்சாப்பும் பூழாப்பும்' நன்றாகத் தெரியும் என்பது பழிப்புரை. இதில் முற்சொல் பொய்யாகச் செருக்கி மகிழ்வது; புகழார்ப்பு என்பது பூழாப்பு ஆய்விட்டது. புகமுண்டாயினும் ஆர்ப்பது இயல்பில்லை; தம்புகழ் கேட்குங்கால் தலைதாழ்தல் இயற்கை எனக் கலித்தொகை உரைக்கும். பொய்த்து ஆர்ப்புச்செய்யாமையைப், 'பொச்சாவாமை' என்னும் வள்ளுவப்பொருள் பொதுமக்கள் வாயில் வழங்கு வதும், அது பழிக்கு இடமாக இருப்பதும் அறிந்து கொள்ளத்தக்க செய்திகளாம். அருஞ்சொல்' எனக் கற்றோர் இந்நாள் நினைப்பதும், பொதுமக்கள் வழக்கில் இயல்பாகவும் எளிமையாகவும் வழங்கப் படுதல் நினையின் வியப்பேயாம்.