உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி

227

21. காடிக்குக் கேடு

துப்புரவுக்கு (நுகர்வுக்கு) வாய்ப்பு இல்லை; இதனையே அரிய வாய்ப்பாகக் கொண்டு பற்றற்ற துறவைப் பற்றி ருக்கவேண்டும். அதனைச் செய்தல் இல்லாமல் 'அங்கு அது கிடைக்குமா? இங்கு இது கிடைக்குமா?” என்று ஆசைப்படுவார் உளர். அத்தகைய வகையில், வாழாமல் வாழ்வார் வாழ்வு ஒரு வாழ்வு தானா என்று எண்ணிய வள்ளுவர்,

“துப்புரவு இல்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று

என்கிறார். காடி என்பது புளித்துப் போன கஞ்சி. காடிக்கஞ்சி ஆனாலும் மூடிக்குடி என்பது நலப் பழமொழி. அக் கஞ்சியைக் குடிக்கத் தொடு கறியாக ஊறுகாய் இல்லை என்றாலும் புளிப்பை மட்டுப் படுத்த உப்பாவது வேண்டும். அதனால் உப்புக்கும் காடிக்கும் எமனாக இருப்பவர் என்றார்.

பொதுமக்கள் வாய் தனை எளிமையாகப் பயன் படுத்துகின்றது. சிலர் வாழ்வை உன்னிப்பாகப் பார்த்துக் கஞ்சிக்குக் கேடு” “சோற்றுக்குத் தண்டம்” என்று கூறுகின்றனர்.

66

று

துறவு என்பது பொறி புலன்களின் அடக்கமாகும். அதற்கு மூல அடக்கம் சுவையடக்கம். உணவில் கட்டுப்பாடு இல்லாதவர் துறவியர் ஆகார். “ஒருபோது உண்பான் யோகி!" ஆனால் தின்று கொழுக்கவும், உழைப்பு இல்லாமல் பொழுது கழிக்கவும் விரும்பும் சோம்பர் பெரும் பெரும் துறவு மடங்களில் உள்ளமை துறவுக்கும் கேடு! உறவுக்கும் கேடு! ஆதலால் துப்புரவு பெற்று உழையாச் சோம்பரைப் பெருக்கும் இந்நாள் துறவு மடங்கள் தம்மைத் தாமே ஆய்வு செய்தல் வேண்டும். இல்லையேல் அம்மடங்களே உப்புக்கும் காடிக்கும் கூற்றாகிவிடும்.