உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

22. பூமிக்குப்பாரம்

இதற்கு மேலேயும் போய்ப் 'பூமிக்குப் பாரம்’ என்றும் கூறுகின்றனர். பூமிக்குப் பாரம் என்பது வள்ளுவரால் ‘நிலக்குப் பொறை' எனப்படுகின்றது.

“கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்ல

தில்லை நிலக்குப் பொறை”

(570)

“கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார்

உண்மை நிலக்குப் பொறை”

(572)

“ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்

وو

தோற்றம் நிலக்குப் பொறை’

(1003)

66

தாங்காது மன்னோ பொறை’

(990).

"சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்

""

மூன்று இடங்களில் நிலக்குப் பொறை என்ற வள்ளுவர், ஓரிடத்தே 'இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை’ என்கிறார். பொறையாவது பாரம், சுமை.

அறிவிலார் வழியில் நிற்கும் அரசு, ஈவிரக்கம் இல்லார் வாழ்வு, கருமிகள் வாழ்வு ஆகியவை மண்ணுக்குப் பாரம்; சான்றோர் பண்பு குறைந்தால் தன் பாரத்தையும் கூட நிலம் தாங்காது என்று குறிக்கிறார் திருவள்ளுவர்.

கல்வியால் இயங்க வேண்டிய ஆட்சியாளர் கல்லாமையை அரவணைப்பதும், கனிவுக்குரிய கண் இருந்தும் கண்ணோட்டம் இல்லாராய் இருப்பாரும், முயற்சிக் குரிய பிறப்பு எடுத்தும் ஈட்டாதும் ஈயாதும் இருப்பா ரும் பிறவிக்குக் கேடு செய்பவர் ஆதலால் அவர் மண்ணுக்குப் பாரமாயினர். சால்பைக் கட்டிக் காத்தலே உலகக் காவலாய் இருக்கவும், அவரே அச்சால் பில் குறைதல் உலகியல் அழிவே என்பதால் நிலம் உலகோரைத் தாங்காது என்றார்.

சான்றோர் சான்றாண்மையே உலகச் சுமையைக் குறைப்பது. அச்சான்றாண்மை அவரிடமே குறைந்து போனால், பாரத்தின் மேல் பாரம் தானே உலகுக்கு!