உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

இளங்குமரனார் தமிழ் வளம் - 20

24. சாய்க்கடையில் பால்

தக்கார் அவையில் தக்கதைச் சொல்ல வேண்டும். அறிவற்றவர் அவையில் அறிவு கூர்ந்த செய்தியைக் கூறுவது சாய்க்கடையில் கொட்டப்பட்ட பாலைப் போன்றது என்பார் திருவள்ளுவர் (720) அவர், ‘அங்கணத்துள் உக்க அமிழ்து' என்பார். பொது மக்களோ அங்கணம் என்பதைச் சாய்க்கடை என வெளிப் படுத்தி, அமிழ்து என்பதற்குப் பால் எனப் பொருள் தந்து வழங்குகின்றனர்.

என

அங்கணம்' என்பது சாய்க்கடை, சலதாரை இந்நாளிலும் தென் மாவட்டங்களில் வழங்கப்படுதல் கேட்கக் கூடியதாம்.

66

அவனுக்கு நான்

எவ்வளவோ

சொன்னேன்;

சாக்கடையில் கொட்டிய பால் ஆகிவிட்டது" என்பார் சொல் நம் காதில் விழத்தானே செய்கின்றது.

“பன்றியின் முன்னர் மணியைப் போடாதீர்”

"கழுதை அறியுமா கற்பூர வாடை

என்பவையும் அத்தகையவே.

சொல்லிவய சொல் பயன் சொல்! அதனைச் சொல்லும் இடமோ பயன்படா இடம்! ஆதலால் பயன் சொல் தன் பயன் இழத்தல் ஆகாது என்னும் எச்சரிக்கை இதுவாம்.