உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி

231

25. வேடதாரி

'தமக்கென வாழாப் பிறர்க் குரியாளர்' என வாழ்வார் தவவாழ்வர்; பிறர் வேண்டும் வேண்டும் என்பவற்றை ‘வேண்டா’ என்று நீத்தவர் அவர். ஆனால் தவத் தோற்றம் உடையார் பலர் தவத்தன் மையராக இருப்பது இல்லை. அவர்கள் போலித் தவத் தராக வாழ்கின்றனர். வஞ்சம் சூது கயமை என்பவற் றுக்கு உறைவிடமாகத் திகழ்கின்றனர். இவர்கள் வாழ்வு கண்ட திருவள்ளுவர் ‘கூடா ஒழுக்கத்தார்' என்றார்.

கூடா ஒழுக்கத்தார் தவவேடம் கொண்டிருப்பார்; ஆனால் அவர் எண்ணமும் செயலும் சொல்லும் தவத்தொடு கூட ாதவையாக இருக்கும். ஊரை ஏமாற்ற நாடகமாந்தர்போல் வேடம் போட்டவர் அவர். அதனைப் ‘பசு புலித்தோல் போர்த்து மேய்வது' என்றும் புதர்க்குள் மறைந்து கொண்டு வேட்டுவன் பறவையை வேட்டையாடுவது என்றும் கூறுகிறார்.

“வலியில் நிலைமையால் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று”

“தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று

என்பவை அவை.

நல்லவனாக

நடித்துப்

பொல்லாதவனாகக்

கேடு

செய்பவனைப் பொதுமக்கள் நாளும் காணத்தானே செய்கின்றனர். அவர்கள், அத்தகையவர்களைக் கவட நாடகத்தான், வேடதாரி, பகல் வேடக்காரன், நடிகன் என்றெல்லாம் கூறுகின்றனர். ஆளுக்குத் தக்கபடியும் நேரத்துக்குத்தக்க படியும் தோற்றம் தருபவனைப் ‘பச்சோந்தி' என்கின்றனர்.

அறவோர் ஆட்சியும் பொதுமக்கள் காட்சியும் ஒத்த வகையில் ஒரு பொதுமைப்பட்டுத் தோன்றுவதுஇத்தகையவற்றால் புலப்படும், சந்தன மணம் சந்தனக் கிண்ணத்திலும், பூவின் மணம் பூக்குடலையிலும் படிந்து கிடப்பது போன்றது இது.