உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

இளங்குமரனார் தமிழ் வளம் - 20

இன்னும் ஒரு காட்சி: நல்லவனாக நடித்து நம்ப வைத்துக் கெடுப்பானுக்கு ஒரு மரபுத் தொடர் வழங்கு கின்றது. அது “ருத்ராட்சப் பூனை” (உருத்திராக்கப் பூனை) என்பது. உருத்திராக்கம் தலையில் மட்டுமா?

66

கழுத்தில்

-

அலையலையாகத் தொங்குதல் மட்டுமா? கையில் புரளுதல் - (புரட்டுதல் இன்னும் சரியாக இருக்குமோ) என எத்தனை பேர் போலித்துறவிகள்! பூனைக்கு வரவேற்பு என்ன? “இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா?” என்னும் மக்கள் உரை மேலும் விளக்கமாக்குகின்றது. தெருக்குரல், அகராதி கொண்டு பொருள் பார்க்கத்தக்கது இல்லையே.